சினிமா

நடிகை சுபா திடீர் மரணம்

அண்மையில் வெளியான "மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்த நடிகை சுபா புட்டேலா (21) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தினமணி

அண்மையில் வெளியான "மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்த நடிகை சுபா புட்டேலா (21) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த சுபா, தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சுபாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.

பொறியியல் படிப்பை முடித்துள்ள சுபா, இந்திய அளவில் நடைபெற்ற அழகிப் போட்டிகளில் பங்கேற்றவர். மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வந்தார். மணிரத்னத்தின் "கடல்' படத்தில் கதாநாயகியாக நடிக்க பரிசீலிக்கப்பட்டவர்.

அவருக்கு பெற்றோர், ஒரு சகோதரர், ஒரு சகோதரி உள்ளனர். மறைந்த சுபாவின் இறுதிச் சடங்கு அவருடைய சொந்த ஊரான லூதியானாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT