ஹிம்மத்வாலா ரீமேக்கில் சோனக்ஷி சின்ஹா
இந்தப் படத்தில் இந்தி நடிகை சோனக்ஷி சின்ஹா குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆட்டம்
1983ம் ஆண்டு இந்தியில் வெளியான ஹிம்மத்வாலா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகில் உச்சத்துக்குச் சென்றார். இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்து ஹிம்மத்வாலா திரைப்படம் தற்போது தெலுங்கில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
ஜிதேந்திரா கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடித்து வருகின்றனர். யுடிவி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை சஜீத் கான் இயக்குகிறார். இந்தப் படத்தில் இந்தி நடிகை சோனக்ஷி சின்ஹா குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆட்டம் போட இருக்கிறார்.