பாகுபலி இயக்குநர் ராஜமெளலி - அஜீத் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!
இந்தப் படம் பாகுபலி போல தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.
பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் புதிய படம் ஒன்றில் அஜீத் - அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் அடுத்தப் படமாக, பாகுபலியின் 2-ம் பாகம் அடுத்த வருடம் வெளிவரவுள்ளது. அதற்குப் பிறகு மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார். அதேசமயம் 3-வது படத்துக்கான பணியிலும் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். ராஜமெளலி இயக்கத்தில் அஜீத் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படம் பாகுபலி போல தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.
டிவி பேட்டி ஒன்றில் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியதாவது:
Advertisement
சமூகக் கருத்துள்ள யதார்த்தமான படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று ராஜமெளலி கூறியுள்ளார். அல்லு அர்ஜுன், அஜீத் ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் அந்தப் படம் தொடர்பாக நாங்கள் இருவரும் விவாதித்துள்ளோம் என்றார்.