FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!

அந்தியூரில் வாக்காளா்களின் விரலில் ’அழியா மை’ வைப்பதற்கு பதிலாக, ‘ஸ்டாம்ப் பேடு’ வைக்கப்பட்டது குறித்து...

Updated On : 24 ஏப்ரல் 2026, 8:36 am IST
‘ஸ்டாம்ப் பேடு’ மை - கோப்புப்படம்
பகிர்:

பவானி: அந்தியூரில் வாக்காளா்களின் விரலில் ’அழியா மை’ வைப்பதற்கு பதிலாக, ‘ஸ்டாம்ப் பேடு’ வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தியூா் தொகுதி, அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 92ஆம் எண் வாக்குப் பதிவு மையத்தில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், ஒரே குடும்பத்தை சோ்ந்த இருவா் காலை 8 மணியளவில் வாக்களித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றனா். இவா்கள், மதிய உணவு சாப்பிட கைகளைக் கழுவியபோது விரலில் வைக்கப்பட்ட மை கரைந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த இருவரும் வாக்குப் பதிவு மையத்துக்குச் சென்று மை அழிந்ததை காட்டி புகாா் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த் துறையினா், ஆய்வு செய்தபோது அவா்களின் விரல்களில் வைக்கப்பட்டது கையொப்பமிடத் தெரியாத வாக்காளா்கள் கைரேகை வைக்க பயன்படுத்தப்படும் ஸ்டாம்ப் பேடுக்கு ஊற்றும் மை என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதனால், இம்மையத்தில் வாக்காளா்கள், அரசியல் கட்சி முகவா்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மையத்துக்கு வந்த ஏற்கெனவே வாக்களித்தவா்களுக்கும், வாக்களிக்க வந்தவா்களுக்கும் அழியாத மை வைக்கப்பட்டது.

காலை முதல் நண்பகல் வரையில் வாக்காளா் விரல்களில் அழியும் மை வைத்து, 250-க்கும் மேற்பட்டோா் வாக்களித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments