300 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட சல்மான் கான் படம்!
இதுவரை வெளிவந்த சல்மான் கான் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான்.
இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் போன்றோர் நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படம், 300 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது.
இதுவரை வெளிவந்த சல்மான் கான் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான். இதற்கு முன்பு ரூ.200 கோடி வசூலித்த சல்மான் கான் படமாக ‘கிக்’ இருந்தது. அதன் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது. 2015-ல் அதிகம் வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.