கமலின் தூங்காவனம் படப்பிடிப்பு முடிந்தது; தீபாவளி ரிலீஸ்! (படங்கள்)
எல்லோரும் சொல்வதுபோல இந்தப் படத்தை 39 நாள்களில் முடிக்கவில்லை...
ஏற்கெனவே இந்த வருடம் 2 கமல் படங்கள் வெளிவந்துள்ளன (உத்தம வில்லன், பாபநாசம்). இப்போது இன்னொரு படமும் வெளிவர தயாராக உள்ளது.
சமீபத்தில், தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றது. கடைசி நாளன்று கேக் வெட்டி இந்நிகழ்வைக் கொண்டாடியது படக்குழு. கமல், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் போன்றோர் இதில் நடித்துள்ளார்கள்.
கமலிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜேஷ் எம். செல்வா இப்படத்தை இயக்கியுள்ளார். தூங்காவனம் படம் பற்றி அவர் கூறும்போது: இந்தப் படத்தை இயக்க என்னைத் தேர்வு செய்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தேன். எல்லோரும் சொல்வதுபோல இந்தப் படத்தை 39 நாள்களில் முடிக்கவில்லை. 39 நாள்களை விடவும் சிறிது நாள்கள் ஆயின. ஆனால், வேகமாக படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்றார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளது.
Advertisement
இதைத் தொடர்ந்து, தூங்காவனம் தீபாவளி அன்று வெளியாகிறது. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.