முகப்பு
சினிமா

கமலின் தூங்காவனம் படத்தில் ஒரே பாடல்!

இந்த ஒரே ஒரு பாடலை கமல் பாடியுள்ளார். பாடலை எழுதியவர், வைரமுத்து.

Updated On : 13 ஆகஸ்ட், 2015 at 2:32 PM
பகிர்:

கமலின் தூங்காவனம் படத்தில் ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது. 

சமீபத்தில், கமல் நடிப்பில் உருவாகும்  தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றது. கடைசி நாளன்று கேக் வெட்டி இந்நிகழ்வைக் கொண்டாடியது படக்குழு. த்ரிஷா, பிரகாஷ் ராஜ் போன்றோரும் இதில் நடித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் தூங்காவனம் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலை கமல் பாடியுள்ளார். பாடலை எழுதியவர், வைரமுத்து.

Advertisement

தூங்காவனம் தீபாவளி அன்று வெளியாகிறது. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.