முகப்பு
சினிமா

ரஜினி, கமலை சந்தித்தார் விஷால்!

விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் மற்றும் விஷால் குழுவினர்...

Updated On : 17 ஆகஸ்ட், 2015 at 3:31 PM
பகிர்:

நடிகர் சங்கத் தேர்தலுக்காக ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் இன்று சந்தித்து ஆதரவு கோரினார் நடிகர் விஷால்.

விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சரத்குமார் மற்றும் விஷால் குழுவினர் இடையே கடும்போட்டி நிலவுகிறது. விஷால் குழுவில் நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் உள்ளார்கள். இந்த அணிக்கு பாண்டவர் அணி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு கோரும் விதமாக ரஜினி, கமலை இன்று சந்தித்தது விஷால் குழு. தங்களுக்கு ஆதரவு தருமாறு இருவரையும் விஷால் கேட்டுக்கொண்டார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.