முகப்பு
சினிமா

கடலூர் நிலவரம் பற்றி நடிகர் சித்தார்த் பேட்டி!

அவை வெள்ளத்தில் மூழ்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படியல்ல. வெளியில் இருந்துகொண்டு கடலூரைப் பற்றி கருத்து சொல்லவேண்டாம்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

சென்னையில் பெய்த கனமழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசும் மத்திய அரசும் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நடிகர்களும் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தியுள்ளார்கள்.

இவர்களில் நடிகர் சித்தார்த் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு, பாய், தண்ணீர் பாட்டில்கள், உடைகள் என அனைத்தையும் பலருடைய உதவியுடன் வழங்கி வருகிறார்.

நிவாரணப் பணிக்காக கடலூர் சென்ற சித்தார்த், ஒரு பேட்டியில் கூறியதாவது:

நாங்கள், கடலூரில் உள்ள 15 கிராமங்களுக்குச் சென்றோம். அவை வெள்ளத்தில் மூழ்குவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படியல்ல. வெளியில் இருந்துகொண்டு கடலூரைப் பற்றி கருத்து சொல்லவேண்டாம்.

பாய், போர்வைகள், கொசுவர்த்திச் சுருள்கள் போன்றவற்றை கடலூர் மக்களுக்கு அனுப்புங்கள். சிறிய வண்டிகளில் கொண்டு சென்றால் சிறிய சாலைகளிலும் செல்லமுடியும். சிறிய கிராமங்களில் கவனம் செலுத்துங்கள். நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்லும் வண்டிகளில் பேனர்கள் எதுவும் கட்டவேண்டாம். ஏனெனில் அப்படிச் செய்தால் அவை தாக்கப்படலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.