முகப்பு
சினிமா

சிறுநீரகத்தில் கல்: நடிகை வித்யா பாலன் மருத்துவமனையில் அனுமதி!

புத்தாண்டு மற்றும் தனது பிறந்தநாளைக் கொண்டாட, கணவருடன் வெளிநாடு சென்ற நடிகை வித்யா பாலனுக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். தற்போது அவர் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:56 AM
பகிர்:

புத்தாண்டு மற்றும் தனது பிறந்தநாளைக் கொண்டாட, கணவருடன் வெளிநாடு சென்ற நடிகை வித்யா பாலனுக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். தற்போது அவர் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை, அபுதாபியிலிருந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்ய இருந்தபோது வித்யா பாலனுக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனால் உடனே விமானத்தில் இருந்து கீழே இறங்கினார். விமான நிலையத்தில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு உடனே கணவருடன் மும்பை திரும்பினார் வித்யா பாலன். அங்கு இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனைகளின் முடிவில், சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால் வித்யா பாலனின் புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.