கமலின் பாபநாசம் ஜூலை 3 ரிலீஸ்!
தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள பாபநாசம் படம் ஜூலை 3-ம் தேதி வெளியாகிறது.
இதுதொடர்பாக அப்படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஜீலை மாதம் 3-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Advertisement
ஒரு குடும்பத்தலைவன் தனது குடும்பத்தை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டும், ஒரு தந்தை தனது மகளை எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவரும் தனது குடும்பத்துடன் பார்த்து பார்த்து ரசிக்கும் வண்ணம் “பாபநாசம்” உருவாகியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பாபநாசம் படத்தின் டிக்கெட்களை ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்