முகப்பு
சினிமா

எதிர்பாராத ஹிட்! ‘இன்று நேற்று நாளை’ பாகம் 2 தயாராகிறது!

படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. சமூகவலைத்தளங்களிலும் பலரும் நல்ல விமரிசனம் எழுதியுள்ளார்கள்.

Updated On : 30 ஜூன், 2015 at 11:31 AM
பகிர்:

ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’.

படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. முதல் மூன்று நாள்களில் 3 கோடி ரூபாய் வசூல் பெற்றது. சமூகவலைத்தளங்களிலும் பலரும் நல்ல விமரிசனம் எழுதியுள்ளார்கள். சிறிய படமான இந்தப் படத்துக்கு இந்தளவுக்கு வசூலும் பாராட்டுகளும் கிடைத்து வருவது பெரிய விஷயம் என்று தமிழ் சினிமாவில் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

முதல் நாளன்று 150 திரையரங்குகளில் வெளியானது. இப்போது அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் இன்னும் பல திரையரங்குகளில் கூடுதலாக வெளியாகியுள்ளது.

Advertisement

இரண்டாம் பாகம்

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் கதை உறுதி செய்யப்பட்டது. ‘இன்று நேற்று நாளை’. படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல முன்னனி நடிகர் நடிக்கவிருப்பதாகத் தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சிலநாள்களில் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.