முகப்பு
சினிமா

மீண்டும் இணையும் ஷோபா சக்தி - காளீஸ்வரி!

ஷோபா சக்தியுடன் மீண்டும் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். விரைவில் படத்தைத் தொடங்க உள்ளோம்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

பிரான்ஸைச் சேர்ந்த இயக்குநர் ழாக் அடியார்ட் இயக்கிய 'தீபன்' படம், கான்ஸ் விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான, உலக அரங்கில் மிக உயரியதாக கருதப்படும் தங்கப் பனை விருதை வென்றது. இதில் ஷோபா சக்தி, காளீஸ்வரி சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்த இரு நடிகர்களும் ஒரு தமிழ்ப் படத்தின் மூலமாக மீண்டும் இணைய உள்ளார்கள்.

ஷோபா சக்தியுடன் மீண்டும் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். விரைவில் படத்தைத் தொடங்க உள்ளோம். படத்தைப் பற்றி வேறு எதுவும் சொல்லமுடியாது என மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை காளீஸ்வரி சீனிவாசன் தெரிவித்தார்.

ஷோபா சக்தி - காளீஸ்வரி நடிக்கும் படத்தை சிவபுராணம் என்கிற படத்தை இயக்கிய அருண் கார்த்திக் இயக்க உள்ளார். வசந்த் சாயுடனான மற்றொரு  படத்திலும் காளீஸ்வரி நடிக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.