முகப்பு
சினிமா

மீண்டும் கிண்டலா? விஜய் டிவி மீது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் தாக்கு! வழக்கு தொடர முடிவு! (வீடியோ)

இது ரசனையற்றது, ஆபாசமானது, அருவருப்பானது. விஜய் டிவி மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப் போகிறேன்

Updated On : 5 அக்டோபர், 2015 at 2:42 PM
பகிர்:

விஜய் டிவியில் தன்னை மீண்டும் கிண்டல் செய்வதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்டல் செய்யும் விதத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி அமைந்தது. இதன் வீடியோ இணையத்தில் மிகவும் பிரபலமானது. இதனால் என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற  வசனத்தை சினிமாவிலும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். விரைவில் வெளிவருகிற ரஜினிமுருகன் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலும் உண்டு.

இந்நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேமா வெர்ஸன் 2 என்கிற ஒரு விளம்பரம் நேற்று விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பார்க்கும்போது நாளை ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியில் மீண்டும் என்னம்மா இப்படி பண்றீங்களேமா வசனத்தைக் கிண்டல் செய்யப் போகிறார்கள் என்று தெரிந்தது.

Advertisement

இதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முட்டாள்தனத்தை நிறுத்துகிறீர்களா? உங்கள் நடிகர்களை வேறு ஏதாவது செய்து பணம் சம்பாதிக்கச் சொல்லுங்கள். இது ரசனையற்றது, ஆபாசமானது, அருவருப்பானது. விஜய் டிவி மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகப் பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

விஜய் டிவியின் விளம்பரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.