முதல்முறையாக சொந்தக் குரலில் பேசியுள்ளார் நயன்தாரா!
இதுவரை தமிழில் பல படங்கள் நடித்துள்ள நயன்தாரா எந்தவொரு படத்துக்கும் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் முதல்முறையாக நானும் ரெளடி தான் படத்துக்குச் சொந்தக் குரலில் பேசியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் போன்றோர் நடித்துள்ள படம் - 'நானும் ரெளடிதான்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில் பேசியுள்ளார்.
‘இதுவரை தமிழில் பல படங்கள் நடித்துள்ள நயன்தாரா எந்தவொரு படத்துக்கும் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தியதில்லை. ஆனால் முதல்முறையாக நானும் ரெளடி தான் படத்துக்குச் சொந்தக் குரலில் பேசியுள்ளார். அவர் இந்தப் படத்துக்கும் டப்பிங் குரலைப் பயன்படுத்தவே விரும்பினார். ஆனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்’ என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.