கமல் - ராஜ் தாக்ரே திடீர் சந்திப்பு!
தாக்ரே குடும்பத்தினரான ராஜ், அவரது மனைவி ஷர்மிளா, மகள் ஊர்வசி போன்றோர் கமலை வரவேற்றார்கள். மகள் ஊர்வசி கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
நடிகர் கமல் ஹாசன், நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
தாக்ரே குடும்பத்தினரான ராஜ், அவரது மனைவி ஷர்மிளா, மகள் ஊர்வசி போன்றோர் கமலை வரவேற்றார்கள். மகள் ஊர்வசி கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
கமல், ராஜ் தாக்ரேவைச் சந்தித்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கமல் எம்என்எஸ் கட்சியில் சேரவில்லை, இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அக்கட்சியினர் தகவல் தெரிவித்தார்கள்.