முகப்பு
சினிமா

படம் வெளியிட தடை விதித்திருப்பது நியாயமற்றது: அருண் பாண்டியன்

செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவுக்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது

Updated On : 3 செப்டம்பர், 2015 at 12:41 PM
பகிர்:

விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நாளை வெளியாகும் சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியன் மற்றும்  கவிதாபாண்டியன் ஆகிய இருவரும் இதுதொடர்பாக கூறியதாவது:

சவாலே சமாளி திரைப்படம் திட்டமிட்டபடி நாளை (04.09.2015) உலகம் முழுவதும் 170-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும்.

Advertisement

படத்தை திடீரென நிறுத்த முடியாது. ஏனெனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. நாங்களே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது. காரணம் படம் ரிலீசுக்கான அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்னைகள் ஏற்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் லிங்கா படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நாங்கள்தான். அந்த வகையில் நாங்களும் கடுமையாக பாதிக்கப் பட்டோம். அதைப் பற்றி இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை.

செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட எரியாவுக்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது என்று கூறினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.