ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்
மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்துக்காக கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் படகுப் பயணம் மேற்கொண்டார்.
மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்துக்காக கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் வெள்ளிக்கிழமை படகுப் பயணம் மேற்கொண்டார்.
படகில் பயணித்த பிரதமர் மோடி ஹூக்ளி நதியின் அழகை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "நேற்று மாலை, ஹவுராவிலிருந்து கொல்கத்தாவிற்கு நடைபெற்ற நீண்ட சாலைப் பேரணியின் போது நான் ஹவுரா பாலத்தில் இருந்தேன்.
இன்று காலை, அதை ஹூக்ளி ஆற்றிலிருந்து பார்த்தேன்!" என்று பதவிட்டுள்ளார். மேலும், ஹூக்ளி நதிக்கரையில் தனது நாளைத் தொடங்கி படகோட்டிகளைச் சந்தித்த பிரதமர், கங்கை நதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். புனிதமான கங்கை நதி "வங்காளத்தின் ஆன்மாவில்" பாய்கிறது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஹூக்ளி நதியில் படகில் செல்லும் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, தன்னை அழைத்துச்சென்ற படகோட்டியை கட்டியணைத்து, பிரதமர் நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி சுமார் ஒரு மணி நேரம் சவாரி செய்ததாகவும், அதற்காக ரூ.1,000 கட்டணம் செலுத்தியதாகவும் படகோட்டி பிஸ்வாஸ் தெரிவித்தார்.
பிரதமர் திடீரென வந்து, படகை வாடகைக்கு எடுத்து சவாரி சென்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
PM Modi took a boat ride on the Hooghly River in Kolkata, admired the Howrah Bridge, met local boatmen, and reaffirmed his commitment to West Bengal's development ahead of Phase 2 polls
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.