ஏ சான்றிதழுக்காக கவலைப்படவில்லை: ஜி.வி. பிரகாஷ் பேட்டி
ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு போல்ட்டான படம் வெளிவரும். த்ரிஷா இல்லனா நயன்தாரா அதுபோன்ற ஒரு படம்தான்.
இந்தத் தலைமுறையின் மிகவும் போல்ட் ஆன படம், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்று கூறியுள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.
நாளை படம் வெளியாகிறது. இப்படத்தின் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் கூறும்போது:
ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு போல்ட்டான படம் வெளிவரும். த்ரிஷா இல்லனா நயன்தாரா அதுபோன்ற ஒரு படம்தான். இந்தத் தலைமுறையின் மிகவும் போல்ட் ஆன படம். படத்தின் தன்மை பற்றி முதலிலேயே தெரிந்ததால் தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்தபோது நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது இளைஞர்களைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட படம். முக்கியமாக கல்லூரிக்குச் செல்கிறவர்கள்.
படம் எப்படி எடுக்கப்படவேண்டுமோ அப்படித்தான் எடுக்கவேண்டும் என்று எண்ணினோம். ஏ சான்றிதழைப் பற்றி கவலைப்படவில்லை. யூ சான்றிதழுக்காக கதையை மாற்றினால் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டது போல உணர்வார்கள். டெல்லி பெல்லி ரீமேக் போல. இந்தப் படத்தினால் தமிழில் மேலும் போல்ட் ஆன படங்கள் வெளிவரும் என்றார்.