நாகர்ஜூனாவின் மகனை தமிழில் அறிமுகப்படுத்தும் ரஜினி!
விழாவில் அவர் கலந்துகொண்டு, நாகர்ஜூனாவின் மகன் அகிலைத் தமிழில் அறிமுகம் செய்வார் என்று
தெலுங்கில் புகழ்பெற்ற நடிகரான நாகர்ஜூனாவின் மகன் அகில் சினிமாவில் அறிமுகமாகிறார்.
அகில் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் நாகர்ஜூனாவின் மகன். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சி. கல்யாண் இதற்கான உரிமத்தை வாங்கியுள்ளார். தமிழில் வெளியாகும் அகில் படம் தொடர்பாக ஒரு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரஜினி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. விழாவில் அவர் கலந்துகொண்டு, நாகர்ஜூனாவின் மகன் அகிலைத் தமிழில் அறிமுகம் செய்வார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
அகில் படத்தை விநாயக் இயக்கியுள்ளார். அக்டோபர் 22-ம் தேதி வெளியாகிறது.