தயாரிப்பாளர் ஆகிறார் நயன்தாரா!
தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை ஒன்றைக் கேட்ட நயன்தாரா, மிகவும் உற்சாகமாகி அந்தப் படத்தைத் தானே தயாரிக்க முடிவு செய்துள்ளார். அந்தப் படத்தில் மாவட்ட ஆட்சியராக அவர் நடிக்க உள்ளார். சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன், இப்படத்தை இயக்க உள்ளார்.