சினிமா

முதலில் ஆபாசமான படங்கள் எடுப்பதை நிறுத்துங்கள்! நடிகையின் ஆதங்கம்

DIN

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் அவருக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் அண்மையில் ஒரு சானலுக்கு பேட்டி அளித்த ராதிகா ஆப்தே நடிப்பு குறித்தும் தனக்கு வரும் கதாபாத்திரங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசினார். 

லஸ்ட் ஸ்டோரிஸ், பத்லாபூர், பார்ச்ட் போன்ற படங்களில் மற்றும் அகல்யா என்ற குறும்படத்திலும் வித்யாசமான ரோல்களில் நடித்திருந்தார் ராதிகா. அக்கதாபாத்திரங்கள் பெண்களின் காமத்தை பேசுபவையாக அமைந்திருந்தது ஏதேச்சையான விஷயம்.

ஆனால் பத்லாபூர் படத்தில் அவர் ஆபாச வசனம் பேசியது மட்டுமல்லாமல் க்ளாமராகவும் நடித்திருப்பார். யூட்யூப்பில் அவர் நடித்த சில படக் காட்சிகளின் தொகுப்பை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பத்லாபூர் படத்தில் நடித்தது போலவே கதாபாத்திரங்கள் அவருக்கு வரத் தொடங்கியது சலிப்பூட்டுவதாக உள்ளது என்கிறார் அவர்.

மேலும் அது போன்ற கதாபாத்திரங்களை நான் வேண்டுமென்றே விரும்பி நடிக்கிறேன் என்று வேறு சிலர் நினைக்கிறார்கள்’ என்று வருத்தத்தை தி வுமன் என்ற நிகழ்ச்சியில் பர்க்கா தத்திடம் பதிவு செய்தார் ராதிகா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT