சினிமா

நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்: ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது

திரைப்பட நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

DIN

திரைப்பட நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அனிஷாவுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சில மாதங்களுக்கு முன் டுவிட்டரில் விஷால் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அவர்கள் இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான அனிஷாவும் திரைத்துறையில் நடிகையாக உள்ளார். அர்ஜுன் ரெட்டி, பெல்லி சூப்புலு போன்ற தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தத்தில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலர் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

நடிகர் சங்கத்தின் செயலாளராக உள்ள விஷால், நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லியிருந்தார். அந்தக் கட்டடம் கட்டும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

ஆகவே, விஷால்-அனுஷா திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறும் என்றும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT