முகப்பு
சினிமா

புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் சஞ்சய் தத்துக்குச் சமீபத்தில் மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது மகனின் 10ஆவது பிறந்த நாளையொட்டி தான் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதாக சஞ்சய் தத் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கடினமான போரில் நான் வெற்றியுடன் திரும்பியிருக்கிறேன். நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தார் என அனைவருக்கும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →