ஜூன் 18இல் வெளியாகிறது தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’ 
சினிமா

ஜூன் 18இல் வெளியாகிறது தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி செவ்வாய்க்கிழமை வெளியானது. 

அதன்படி ஜூன் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

SCROLL FOR NEXT