பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார் 
சினிமா

பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார்

முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979 ஆம் ஆண்டு 'நல்லதொரு குடும்பம் ' திரைப்படத்தில் ' செவ்வானமே பொன் மேகமே ' பாடலின் மூலம் அறிமுகமானார். 

DIN

முன்னணி பாடகியாக வலம் வந்த கல்யாணி மேனன் தமிழில் 1979 ஆம் ஆண்டு 'நல்லதொரு குடும்பம் ' திரைப்படத்தில் ' செவ்வானமே பொன் மேகமே ' பாடலின் மூலம் அறிமுகமானார். 

தொடர்ந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் மற்றும்  ஹிந்தி  மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

தமிழில் பிரபலமடைந்த  'முத்து' படத்தின் 'குலுவாலிலே',  'அலைபாயுதே' படத்தில் 'அலைபாயுதே', 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 'ஓமணப் பெண்ணே' உள்ளிட்ட பல பாடல்கள் கல்யாணி மேனன் பாடியவை தான்.

அதிகம் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடியிருக்கிறார் . 

உடல்நலக் குறைவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பட்டவர் இன்று மதியம் காலமானார்.

இவருக்கு இரண்டு மகன்கள் அதில் ஒருவர் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான  ராஜீவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது  .

நாளை சென்னையில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓல்ட் இஸ் கோல்ட்... மீனா!

கமல் செயலால் கண் கலங்கிய ஊர்வசி!

மழை மட்டும்தான் அழகா..? நைலா உஷா!

சின்ன திரை பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது!

SCROLL FOR NEXT