முகப்பு
சினிமா

'கோப்ரா' படத்தின் பாடல்கள் வெளியானது

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. 

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படதை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பு - எஸ்.எஸ். லலித் குமார். 

இந்நிலையில் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

நேற்று சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. தற்போது படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. படத்தில் பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர்கள் பாடல்களை எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

பாடல்களை யூடியூப், ஸ்ப்பாடிஃபை, ஜியோ சாவன், ரெஸ்ஸோ, வின்க் மியூசிக், கானா, அமேசான் மியூசிக், ஆப்பிள் மியூசிக் ஆகிய செயலிகளிலும் கேட்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →