சினிமா

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வரலட்சுமி நடிப்பில் தமிழில் காட்டேரி, பாம்பன், யானை என அடுத்தடுத்து படங்கள் வரவுள்ளது. இதில் யானை, இரவின் நிழல் வெளிவந்து விட்டது. இது தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகிவரும் சபரி, கன்னடத்தில் லகாம், தெலுங்கில் ஹனு மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் வரலட்சுமிக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தன்னுடைய வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறார். 

வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டு உடைந்த குரலில் பேசியதாவது:

எல்லோருக்கும் காலை வணக்கம். ஆனால் எனக்கு நற்காலையாக இல்லை. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துக் கொள்ளவும். தனித்து இருங்கள். கோவிட் இங்கேயேதான் இருக்கிறது. எனவே முகக் கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய விரோத சக்திகளுக்கு கொடி பிடிக்கிறாா் ராகுல்: பாஜக கடும் தாக்கு

மானாமதுரையில் ரயில்வே கடவுப் பாதை நிரந்தரமாக மூடல்: பொதுமக்கள் அவதி

சிவகங்கை மெளன குருசாமி சித்தா் மடத்தில் சித்தயோகி பரமஹம்சா் சிலை பிரதிஷ்டை

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் ஜனவரியில் திறப்பு

காரைக்குடி செஞ்சை குழந்தை யேசுவின் புனித தெரசாள் ஆலயத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT