சினிமா

இயக்குநர் விஜய் இயக்கும் புதிய இணையத் தொடர்

1940இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘தி மெட்ராஸ் மர்டர்’ என்ற இணையத் தொடர் பற்றிய தகவலை சோனி லைவ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது. 

DIN

1940இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘தி மெட்ராஸ் மர்டர்’ என்ற இணையத் தொடர் பற்றிய தகவலை சோனி லைவ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது. 

இயக்குநர் விஜய், சூர்யபிரதாப் ஆகியோர் இந்த தொடரை இணைந்து எழுதி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் மூலம் ஐபி கார்த்திகேயன் தயாரித்துள்ளார். 

சினிமா பிரபலங்கள் சம்மந்தப்பட்ட அவதூறுகளை எழுதியதற்காக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி எடுக்கப்பட்ட தொடர் என தகவல் சொல்லப்படுகிறது. 

இந்த தொடரில் நடித்த நடிகர்கள் பற்றி படக்குழுவினர் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  இதைக்குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறியதாவது:

மிகவும் முக்கியமான பெரிய தொடரான ‘தி மெட்ராஸ் மர்டர்” படத்தில் நன்  பங்குபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது சென்னை மாகாணத்தில் 1940இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. சுதந்திரந்திற்கு முந்தைய சென்னையை மக்களுக்கு டிஜிட்டல் முறையில் நல்ல அனுபவத்தை தரும் வகையில் காட்டுவதற்காக எங்களது படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

SCROLL FOR NEXT