சினிமா

சல்மான் கானுக்கு ‘ஒய் பிளஸ்’; அக்ஷய்குமாருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு

பாலிவுட் நடிகர் சல்மானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

DIN

பாலிவுட் நடிகர் சல்மானுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலை தொடர்ந்து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸே வாலாவை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னொயின் கும்பலால், கடந்த ஜூலை மாதம் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மும்பை காவல்துறையால் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், சல்மான் கானுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் கமாண்டோக்கள் உள்பட 11 ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.

அதேபோல், கொலை மிரட்டல் காரணமாக அக்ஷய்குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கும் ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT