சினிமா

டீப்ஃபேக்கில் சிக்கிய பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் அதிர்ச்சி

DIN

பிரியங்கா சோப்ராவின் டீப்ஃபேக் விடியோ வெளியாகி, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட நடிகையை இலக்காகக் கொண்டு டீப்ஃபேக் முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விடியோ, அண்மையில் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

செயற்கை நுண்ணறிவு வளா்ச்சியின் ஒரு பகுதியாக ‘டீப்ஃபேக்’ (Deep Fake) தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒருவா் பேசும் உண்மையான ஆடியோ, விடியோ, புகைப்படங்கள் போன்று மற்றொரு நபா் மூலம் போலியான ஆடியோ, விடியோ, புகைப்படங்களை உருவாக்க முடியும். 

அதாவது ஒருவரது உருவத்தையும், குரலையும் பயன்படுத்தி மற்றொருவா் நடித்து அவரை போன்ற விடியோவையோ, ஆடியோவையோ உருவாக்க முடியும்.

டீப்ஃபேக்கில்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி இணையத்தில் வைரலானது.  தொடர்ந்து, கத்ரினா கைஃப் ஆகியோரின் போலி விடியோக்கள் வைரலான நிலையில் கஜோலின் விடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், ஒரு நிறுவனத்துக்கு ப்ரோமோஷன் செய்யும் பிரியங்கா சோப்ரா, தனது வருமாணத்தை தெரிவித்து அந்த நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வது போல்  டீப்ஃபேக் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து டீப்ஃபேக் முறையைப் பயன்படுத்தி போலி விடியோக்கள் உருவாக்கப்பட்டு வருவது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT