சினிமா

பாலி தீவுக்குச் சென்ற மற்றொரு எதிர்நீச்சல் நடிகை!

நண்பர்களுடன் செல்லத் திட்டமிட்டு இறுதியில் விமானத்தை தவறவிட்டதை கேலியாகப் பகிர்ந்துள்ளார்.

DIN

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை ஹரிபிரியா இசை பாலி தீவுக்குச் சென்றுள்ளார். முன்னதால நடிகை மதுமிதா சென்றிருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து நடிகை மதுமிதாவும் சென்றுள்ளார்.

படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கும் வகையில் நண்பர்களுடன் ஹரிபிரியா இசை, பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மதுமிதா, தான் பயணம் மேற்கொண்டுள்ள விடியோவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நண்பர்களுடன் செல்லத் திட்டமிட்டு இறுதியில் விமானத்தை தவறவிட்டதை கேலியாகப் பகிர்ந்துள்ளார்.

பின்னர் தனியாக விமானம் பிடித்து பாலி தீவுக்குச் சென்றுள்ளார். அங்கு கடலில் குளிப்பது, கப்பலில் செல்வது, கண்காட்சியில் விலங்குகளுடன் விளையாடுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்பு நடிகை மதுமிதா, தனது பிறந்தநாளையொட்டி பாலி தீவுக்குச் சென்றிருந்தார். அங்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தற்போது ஹரிபிரியாவும் பாலி தீவுக்குச் சென்றுள்ளதால், எதிர்நீச்சல் தொடரில் நாயகிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா? என சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT