சினிமா

சிவகார்த்திகேயன் - 21 டீசர் அறிவிப்பு!

DIN

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுது.

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் பெயர் அறிவிப்பு டீசரைப் பார்த்த இயக்குநர் நெல்சன் படக்குழுவைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரமிது: இலங்கை கேப்டன்

தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

ஊர் சுற்றக் கிளம்பிய சமந்தா!

அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

"மோடியை கேலி செய்வதில் எந்த தயக்கமும் இல்லை": கேரள காங்கிரஸ் எக்ஸ் பதிவு!

SCROLL FOR NEXT