சினிமா

பிரபு தேவாவின் பேட்ட ராப்: முதல் பார்வை போஸ்டர்!

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநராக இருந்து நடிகராக, இயக்குநராக என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

1994இல் காதலன் படத்தில் இருந்து இயக்குநர் ஷங்கர் எழுதிய பேட்ட ராப் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலின் தலைப்பில் பிரபு தேவா புதிய படத்தில் நடத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள பேட்ட ராப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபு தேவாவுடன் நடிகை வேதிகா நடித்துள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: 150 மனுக்கள் பெறப்பட்டன

கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

சட்டவிரோத ஊடுருவலை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது காங்கிரஸ் - அமித் ஷா சாடல்

லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT