சினிமா

யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் இணைந்து நடிக்கும் புதிய படம்!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. 

DIN

இயக்குநர் ஆர்கே வித்யாதரன் இயக்கத்தில் உருவாகும் ஸ்கூல் என்ற திரைப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, இயக்குநர் மற்றும் நடிகரான கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து நடிக்கின்றனர். 

ஆர்கே வித்யாதரனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் பூமிகா சாவ்லா கதாநாயகியாக நடிக்கிறார். 

ஒரு பள்ளிக்கூடத்தை கதைக்களமாக வைத்து, சைக்காலஜிக்கல் திரில்லராக இந்தப் படம் உருவாக்கபடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பள்ளியில் நடக்கும் குற்றங்களே கதையின் மையமாக இருக்கும் எனக் கூறியுள்ளனர்.   

யோகி பாபு, மற்றும் பூமிகா சாவ்லா அந்தப் பள்ளியின் ஆசிரியர்களாக நடிக்கவுள்ளனர். பகவதி பெருமாள் மற்றும் சாம்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நடிக்கின்றனர். பள்ளியில் நடக்கும் குற்றங்களை விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக கே.எஸ். ரவிக்குமார் நடிக்கவுள்ளார். 

இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆதித்யா கோவிந்தராஜ் மற்றும் எடிட்டராக ராகவ் ஏஆர்எஸ் பணியாற்றுகின்றனர். ஆர்.கே. வித்யாதரன் மற்றும் கே. மஞ்சு இணைந்து குவாண்டம் ஃபில்ம் ஃபேக்கடரி (Quantum film factory) என்ற பெயரில் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT