சினிமா

டார்ஸான் தொடர் ஹாலிவுட் நடிகர் காலமானார்!

டார்ஸான் புகழ் ஹாலிவுட் நடிகர் ரான் எலி காலமானார்!

DIN

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் பார்வையாளர்களின் மனதில் தனி இடம்பிடித்த, 1960-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி தொடரான ‘டார்ஸான்’ தொடரில் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் நடிகர் ‘ரான் எலி’ காலமானார். அவருக்கு வயது 86.

தனது தந்தை உயிரிழந்துவிட்ட தகவலை அவருடைய மகள் கிர்ஸ்டன் கசேல் எலி புதன்கிழமை(அக்.23) தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் லாஸ் அலாமோஸ் பகுதியிலுள்ள தனது வீட்டில் கடந்த மாதம் (செப். 29) அவர் இறுதிமூச்சைவிட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

நடிப்பதுடன் நிறுத்தாமல், 1980-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் ரான் எலி. 2001-ஆம் ஆண்டுக்கு பின் நடிப்புத்துறையிலிருந்து விலகி முழு நேரமும் குடும்பத்துக்காக செலவிடுவதாக தெரிவித்திருந்தார் எலி.

6 அடி 4 இன்ச் உயரத்தில் கட்டுமஸ்தான உடல் அமைப்பையும் கொண்டு பார்வையாளர்களை கவர்ந்த ரான் எலி, ஒரு எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, அவரது மனைவி வாலெரி லண்டீன் எலி(62), அவரது மகன் கேமரூன் எலியால்(30) வீட்டில் வைத்தே குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது மகன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT