குட் பேட் அக்லி.. 
சினிமா

குட் பேட் அக்லி முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

குட் பேட் அக்லி முதல்நாள் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி..

DIN

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி' நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லி படம் உலகம் முழுவதும் நேற்று வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் அலைமோதியது.

இதையும் படிக்க: அஜித்தின் திரைவாழ்வில் ஒரு... குட் பேட் அக்லி - திரை விமர்சனம்!

படம் வெளியாவதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு முதலே திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குட் பேட் அக்லி முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளது. வலிமை படம் முதல் நாளில் ரூ. 28 கோடி வசூலித்திருந்தது. இப்போது அதை முறியடித்துள்ள குட் பேட் அக்லி படம், வாரயிறுதியான சனி, ஞாயிறு மற்றும் தமிழ் வருடப்பிறப்பு ஆகிய தொடர் விடுமுறை காரணமாக நல்ல வசூலைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: எவ்வளவு எழுதினாலும் தீராது..! அஜித்துடன் நடித்ததற்கு பிரியா வாரியர் நீண்ட பதிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான கராத்தே போட்டி: தனியாா் பள்ளி மாணவா்கள் சாதனை

கமுதியில் இரும்பு கடையில் தீ விபத்து

தொண்டியில் போக்குவரத்துப் பணிமனை அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய பயணிகள் காத்திருப்பு அறையில் செயல்படாத மின்விசிறிகள்

பாஜக இளைஞரணி தலைவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT