கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். இதற்காக, கடந்த ஆண்டே ’அஜித் குமார் ரேஸிங்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது கார் பந்தயத்துக்கான பயிற்சியில் அஜித் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக துபையில் தனது ஃபெராரி காரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக பந்தயத்துக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருந்த போது, சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதியதில் அவரின் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், காயமின்றி அஜித் உயிர் தப்பினார்.
அந்த விபத்துக்குப் பின்னர், அஜித் தற்போது முதல் முறையாக துபையின் 24 எச் ரேசிங்கில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், “ அடுத்த 9 மாதங்களுக்கு நான் எந்தப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை. வருகிற அக்டோபர் வரை படத்தில் நடக்க மாட்டேன். கார் பந்தயத்தில் அதிகம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு போட்டியாளராக மட்டுமின்றி ஒரு உரிமையாளராகவும் கூறுகிறேன். அக்டோபருக்குப் பின்னர் மார்ச்க்கு இடைப்பட்ட காலங்களில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்.
2003 ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ கார் பந்தயத்தில் கலந்துகொண்டு முழுமையாக முடித்தேன். 2004 ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் ஃபார்முலா-3 கார் பந்தயத்தில் கலந்துகொண்டேன். ஆனால், அதை என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை. என்னுடைய 18 வயதில் கார் பந்தயத்துக்கான பயிற்சியைத் தொடங்கினேன்.
அதன்பிறகு படத்தில் நடிப்பதற்கு கவனம் செலுத்தியதால் அதைத் தொடர முடியாமல் போனது. 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்துகொண்டேன். இருந்தாலும் அதையும் தொடரமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.