முகப்பு
சினிமா

காலமானாா் இயக்குநா் விக்ரம் சுகுமாரன்

திரைப்பட இயக்குநா் விக்ரம் சுகுமாரன் (48) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 2) காலமானாா்.

Updated On : 3 ஜூன், 2025 at 3:26 AM
திருத்தப்பட்டது... செய்தி உண்டு. மாரடைப்பால் காலமான திரைப்பட இயக்குநா் விக்ரம் சுகுமாரன்.
பகிர்:
Updated On : 2 ஜூன், 2025 at 10:55 PM

சென்னை:  திரைப்பட இயக்குநா் விக்ரம் சுகுமாரன் (48) மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 2) காலமானாா்.

மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மறைந்த இயக்குநா் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவா் விக்ரம் சுகுமாரன். பொல்லாதவன், கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்த இவா், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான ‘ஆடுகளம்’ படத்தில் வசனம் எழுதியுள்ளாா். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநரான தமிழ் திரையுலகில் அறிமுகமானாா். அந்த படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

அதன் பின்னா், 10 ஆண்டுகள் கழித்து சாந்தனுவை வைத்து ‘இராவணக் கோட்டம்’ படத்தை இயக்கினாா்.