கண்ணப்பா படத்திலிருந்து படம்| கண்ணப்பா படக் குழு
சினிமா

மோகன் லால், பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ‘கண்ணப்பா’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

’கண்ணப்பா’ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு? என்பதைப் பற்றிய விவரம்

DIN

நடிகர்கள் மோகன் லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ’கண்ணப்பா’ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு? என்பதைப் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நடித்துள்ள ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை(ஜூன் 27) திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் ’பான்-இந்தியா’ திரைப்படமாக கண்ணப்பா உருவாக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ஒரு சிவபக்தர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் மோகன் லால், பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்திலும் இளம் நாயகி ப்ரீத்தி முந்தன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், மோகன் பாபு என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே ‘கண்ணப்பா’-இல் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் நிலவியது.

இந்த நிலையில், இத்திரைப்படம் வெளியான முதல்நாளில் மட்டும் ரூ. 9 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் படத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் தவெக கூட்ட நெரிசல் பொதுநல வழக்கு இன்று விசாரணை!

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

மாய ஜாலக்காரி... கீர்த்தி சுரேஷ்!

இந்திய சினிமா இதுவரை கண்டிராதது... காந்தாரா பற்றி சந்தீப் வங்கா!

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT