கட்டுமஸ்தான தோற்றத்தில் டொவினோ தாமஸ்!
நடிகர் டொவினோ தாமஸ் குறித்து...
நடிகர் டொவினோ தாமஸ் கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறி அசத்தியுள்ளார்.
தென்னிந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இறுதியாக நரிவேட்டை படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது. ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டொவினோ இன்ஸ்டாகிராமில் தன் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதில், கட்டுமஸ்தான தோற்றத்தில் டொவினோ இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய பான் இந்திய திரைப்படம் ஒன்றிற்கு டொவினோ தயாராகி வருவதால் தன் தோற்றத்தை மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
actor tovino thomas gym body looks viral on social media
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.