படம் | எம்புரான் படக்குழு
சினிமா

மோகன்லாலின் எம்புரான் முதல் காட்சியைக் கண்டுகளிக்க கல்லூரிக்கு விடுமுறை - எங்கே?

‘லைட்ஸ், கேமரா, ஹாலி-டே!”

DIN

மோகன்லால் முதன்மைக் கதாபாத்திரமேற்று நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மாணவர்கள் கண்டுகளிப்பதற்காக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் அரசியல் கதைக்களப் பின்னணியில் வெளியான லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் எம்புரான், இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எம்புரான் டிக்கெட் முன்பதிவிலேயே உலகளவில் ரூ. 60 கோடி வரை வசூலித்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நாயகனாக மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்று அதிரடி முடிவை எடுத்துள்ளது. அக்கல்லூரியின் முதல்வர், நடிகர் மோகன்லால் மீது மிகுந்த அபிமானம் கொண்டவராவார்.

இந்த நிலையில், அக்கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘லைட்ஸ், கேமரா, ஹாலி-டே!” என்று அறிவித்து மாணவர்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள ஒரு திரையரங்கில் மார்ச் 27-ஆம் தேதி காலை 7 மணி காட்சியை மாணவர்களுக்காக முன்பதிவு செய்தும் கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT