ஏஞ்சலினா ஜோலி 
சினிமா

நாவலைத் தழுவிய படத்தில் ஏஞ்சலினா ஜோலி!

ஏஞ்சலினா ஜோலி நடிக்கும் புதிய படம் குறித்து...

DIN

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களான மலேபிஷண்ட், குங்ஃபூ பாண்டா உள்ளிட்ட பல படங்களின் மூலம் உலகெங்கிலும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு இந்தியாவிலும் மிகப் பெரியளவிலான ரசிகர் பட்டாளமுண்டு.

இந்நிலையில், 'ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்‌ஷன்' மற்றும் 'வோர்ல்ட் வார் ஸி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய மார்க் ஃபோர்ஸ்டர் இயக்கத்தில், ஃபிரெட்ரிக் பாக்மான் எழுதிய நாவலைத் தழுவி உருவாகும் புதிய படத்தில் ஏஞ்சலினா ஜோலி நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

’ஆங்ஷியஸ் பீப்பள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ஸாரா எனும் வங்கி ஊழியர் கிறுஸ்துமஸ் நாளன்று, வங்கிக் கொள்ளையர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கும் மக்களில் ஒருவராக சிக்கிக்கொண்ட பின் அங்கு வெளியாகும் ரகசியங்கள், கலவரங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது திரைப்படமாகும் இந்த நாவலைத் தழுவி, கடந்த 2021-ம் ஆண்டு நெட்பிளிக்ஸின் இணையத் தொடர் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

SCROLL FOR NEXT