வெற்றி மாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிப்பில் உருவாகிவரும் படத்தின் பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் - எஸ்டிஆர் கூட்டணியில் வடசென்னை உலகில் கேங்ஸ்டர் திரைப்படமாக எஸ்டிஆர் - 49 படத்தின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
படத்தின் அறிமுக விடியோ மட்டுமே வெளியான நிலையில், புரோமா அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் காரணங்களால் வெளியாகவில்லை.
பெயர் அறிவிப்பு இன்று காலை 8.09 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். அதன்படி, படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்தப் படத்துக்கு ‘அரசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் வடசென்னை யுனிவர்ஸில் சிம்பு 80-ஸ் கெட்டப்பில் கையில் அரிவாளுடன் நின்றுகொண்டிருக்கிறார்.
பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வடசென்னை 2 பாகத்துக்கு முன்னதாக, வடசென்னை யுனிவர்ஸின் சிம்புவின் படம் வெளியாகவுள்ளதாலும், வடசென்னை படத்தில் கதை நாயகனான ராஜனை (அமீர்) கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளை சிம்பு வைத்துள்ளார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வட சென்னை யுனிவர்ஸில் வெற்றி - சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.