நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன் என்று பாடகி ஷ்ரேயா கோஷால் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். வட இந்தியாவில் பிரபல பாடகராகப் புகழ்பெற்ற ஜுபின் கர்க் காலமானார். அவரது உயிர் சனிக்கிழமை(செப். 20) பிரிந்தது.
இந்த நிலையில், அவரை நினைவுகூர்ந்து ஷ்ரேயா கோஷால் தெரிவித்திருப்பதாவது: “ஜுபின் கர்க் நமது நாட்டின் ஒரு தனித்துவமான கலைஞர்; ஒரு மெகா ஸ்டார்; ஒரு நல்ல மனிதர். அவருடைய கலைத்திறமைக்கு, அவரது குரல் வளத்துக்கு நான் எப்போதுமே ஒரு ரசிகை.
அவருடன் சேர்ந்து அஸ்ஸாமிய பாடல்கள் சிலவற்றில் பணியாற்றும் மாபெரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ஜுபின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று வருத்தத்துடன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் பிறந்த ஜுபின் கர்க் வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக அஸ்ஸாமி மொழியில் பாடல்கள் பல பாடி அங்குள்ள மக்களிடம் எஅன்கு பரிச்சயமானவரானார். இந்த நிலையில், அன்னாரது மறைவையொட்டி அஸ்ஸாமில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: பிரபல பாடகர் ஜுபின் கர்க் விபத்தில் பலி! சிங்கப்பூரில் சாகச விளையாட்டில் நேர்ந்த சோகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.