முகப்பு
செய்திகள்

நடிகர் விக்ரம் மகளின் வைர மோதிரம் கிடைத்தது: கால்டாக்சி ஓட்டுநருக்கு பாராட்டு

நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவின் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிச்சயதார்த்த வைர மோதிரம் திரும்ப கிடைத்துள்ளது. அதனை ஒப்படைத்த கால்டாக்சி ஓட்டுநரை விக்ரம் குடும்பத்தினர் வெகுவாக பாராட்டினர்.

Updated On : 15 ஆகஸ்ட், 2016 at 7:58 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 9:59 AM

நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவின் காணாமல் போன ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிச்சயதார்த்த வைர மோதிரம் திரும்ப கிடைத்துள்ளது. அதனை ஒப்படைத்த கால்டாக்சி ஓட்டுநரை விக்ரம் குடும்பத்தினர் வெகுவாக பாராட்டினர்.

இதுகுறித்த விவரம்:

பிரபல நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா -திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் ஆகியோரின் திருமணம் கடந்த மாதம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது அக்ஷிதாவுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி மாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் காதர் நவாஸ்கான் தெருவில் உள்ள ஒரு கடைக்கு வந்த அக்ஷிதா, அங்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது தனது கைவிரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரம் காணாமல் போனதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். அதன் விலை ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் லட்சுமணன் என்பவர் காணாமல் போனதாக கூறப்பட்ட அக்ஷிதாவின் வைரமோதிரத்தை அவரது குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை நேரடியாகச் சந்தித்து ஒப்படைத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த விக்ரம் குடும்பத்தினர் லட்சுமணனின் நேர்மையை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.