முகப்பு
செய்திகள்

நடிகர் சங்க பொதுக்குழுவில் நடக்கப் போவது என்ன?

எதிர் வரும் நவம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் விவாதிக்கப் பட இருக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

சென்னை; எதிர் வரும் நவம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ள தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் விவாதிக்கப் பட இருக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு செய்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டமானது நவம்பர் 27-ம் தேதி லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ் கொண்டுவரும் உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .

நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கி நடத்த உள்ள இக்கூட்டத்தில் முதலில் பொது செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து துணைத்தலைவர் கருணாஸ், 2015-2016 ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை பொதுக்குழுவில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுகிறார்.

மேலும் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்களைப் பற்றி விளக்கமளிக்க உள்ளார்.அதேபோல் பொது செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால நிர்வாக செயல்பாடுகள் பற்றி விவரிக்கும் அதே நேரத்தில், எதிர்கால திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து,பொது குழுவில் ஒப்புதல் கோரவுள்ளார்.

பின்னர் தலைவர் நாசர், தற்போதைய நாடகங்களின் நிலை குறித்தும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் விளக்கமளிக்கிறார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் விருது, தமிழ் சினிமா நூற்றாண்டு விழா விருது மற்றும்  ஆச்சி மனோரமா விருது போன்றவைகள் வழங்கப்படவுள்ளது. விருது பெறுவோருக்கு பொற்கிழியும் அளிக்கபப்டும்.

இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் நன்றி உரை ஆற்ற பொதுக்குழு கூட்டம் நிறைவடைகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →