செய்திகள்

தனுஷுக்கு எனது மகள் ஜோடியா? கவுதமி புதிய விளக்கம்!

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் தனது மகள் சுப்புலக்ஷ்மி ஜோடியாக நடிக்கிறார் என்று பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார்.

DIN

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் தனது மகள் சுப்புலக்ஷ்மி ஜோடியாக நடிக்கிறார் என்று பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடிகர் கமலுடன் வாழ்ந்து வந்த  நடிகை கவுதமி சமீபத்தில் அவரை விட்டு பிரிந்தார். தனது மகள் சுப்புலக்ஷ்மியின் எதிர்காலம் கருதிதான் இந்த முடிவை எடுத்ததாக அப்போது அவர் அறிவித்தார்.

இந்நிலையில் கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, நடிகர் தனுஷ் நடிக்க உள்ள 'வேலையில்லா பட்டதாரி-2' வில்  நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் நேற்று ஒரு தகவல் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவுதமி, 'என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். பொதுவாக நான் வதந்திகளுக்கு விளக்கமளிப்பதில்லை. ஆனால் இது என் மகளின் எதிர்காலம் பற்றியது என்பதால் விளக்கம் கொடுக்கிறேன். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். நடிப்பு பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT