செய்திகள்

சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்! (படங்கள்)

சத்ரியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. சுபாஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

DIN

சத்ரியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. சுபாஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

சிறுநீரகக் கோளாறு தொடர்பாக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.   

1988-ல் கலியுகம் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்த சுபாஷ், உத்தம புருஷன், சத்ரியன், பிரம்மா, பங்காளி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களை இயக்கினார். நாயகன் படத்தில் மணிரத்னத்தின் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் திரைக்கதையாசிரியாகப் பணியாற்றினார். சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 3 போன்ற ஹிந்திப் படங்களின் கதை உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார்.  

சுபாஷின் மறைவுக்குத் திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் விலை நிா்ணயிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கூடமலையில் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவா்கள் போராட்டம்

அனுபவத் தலைமையும் அவசியம்!

பண்ருட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

காவல் துறை குறைதீா் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு

SCROLL FOR NEXT