முகப்பு
செய்திகள்

நடிகை காவ்யா மாதவனைத் திடீர் திருமணம் செய்தார் நடிகர் திலீப்! (வீடியோ) 

இந்த நிலையில் நான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வது சரியாகாது என்று திலீப் பேட்டியளித்தார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:26 AM
பகிர்:

மலையாள நடிகர் திலீப்பும் (48) நடிகை காவ்யா மாதவனும் (32) இன்று கொச்சியில் திருமணம் செய்துகொண்டார்கள். 

மம்மூட்டி, ஜெயராம், மீரா ஜாஸ்மின், மேனகா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். 

திலீப் - காவ்யா ஆகிய இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்பு 1998ல் நடிகை மஞ்சு வாரியரைத் திருமணம் செய்த திலீப், 2015-ல் அவரை விவாகரத்து செய்தார். அதேபோல தொழிலதிபர் நிஸ்சால் சந்திராவை 2009ல் திருமணம் செய்த காவ்யா, அடுத்த வருடமே அவரை விவாகரத்து செய்தார்.

திலீப்பும் காவ்யாவும் 21 படங்களில் ஒன்றாக நடித்தவர்கள். இவர்களுடைய திருமணம் குறித்து நீண்டநாளாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவருமே மறுத்துவந்தார்கள். இந்நிலையில் இன்று இருவரும் திடீர் என திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை மேனகா கூறும்போது, இங்கு வரும்வரை இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.     

இந்தத் திருமணத்துக்கு என் மகளின் சம்மதம் உண்டு. இரு குடும்பத்தின் சம்மதத்துடனே இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. பலமுறை என்னுடன் காவ்யா கிசுகிசுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வது சரியாகாது என்று திலீப் பேட்டியளித்தார்.

நன்றி: Manoramanews 

முழு கட்டுரையைப் படிக்க →